கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை - கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சந்தையில் ஏலம் விடப்பட்ட தக்காளிகள் கிலோவுக்கு 16ரூபாய் விலை ஏறியுள்ளளது இதனால் கிணத்துக்கடவு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது தினசரி காய்கறி சந்தை இந்த சந்தைக்கு தினந்தோறும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் இருந்து தினமும் காய்கறிகள் கொண்டுவரப்படும் கொண்டு வரும் காய்கறிகள் இங்கிருந்துதான் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

கோவை கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி சந்தைக்கு நாள்தொறும் கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் உள்ள சொக்கனூர், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி டன் கணக்கில் வருவதுண்டு ஆனால் சமீப சில நாட்களாக சரியான வரத்துகள் அதிகளவில் இல்லை.

இந்த நிலையில் சென்ற வாரம் வரை ஒரு கிலோ நாட்டு தக்காளி 23 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வியாபாரிகள் மத்தியில் பெரும் கிடுக்கிப்பிடி ஏற்ப்பட்டது.

ஆனால் கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் இருந்து தக்காளி வராத போதும் கிணத்துக்கடவு கிழக்கு பகுதியில் உள்ள சில கிராமங்களில் இருந்து மட்டுமே தக்காளி வரத்து தினசரி காய்கறி சந்தைக்கு வந்துள்ளன கடந்த மாத இறுதிவரை ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு ஏலம் போன நிலையில் மேலும் தக்காளிகளின் வரத்து குறைவான நிலையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி விலை 36 ரூபாய்க்கு ஏலம் சென்றிருக்கிறது.



இந்த நிலையில் சென்ற வாரம் வரை ஒரு கிலோ நாட்டு தக்காளி 23 ரூபாய்க்கு கொள்முதல் செய்த வியாபாரிகள் இன்று ஒரு கிலோ நாட்டு தக்காளி 36 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்கள்

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த விவசாயிகளிடம் விசாரித்த போது வெளி மாநிலங்களில் இருந்தும் உள்ளூரில் இருந்தும் நாட்டு தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என விவசாயிகள் வட்டாரத்தில் கூறுகின்றார்கள்.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...