உதகை அடுத்த மஞ்சூரை சேர்ந்தவர் மணிகண்டன் என்கிற வாலிபர் மது போதையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகைஅடுத்த மஞ்சூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). மது போதையில் தூங்கிக் கொண்டிருந்தார் . அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கோர சம்பவம் குறித்து விசாரித்த மஞ்சூர் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நீலகிரி மாவட்டம் உதகைஅடுத்த மஞ்சூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இவருடைய பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இவருடைய சகோதரி ஒருவர் மஞ்சக்கொம்பையில் வசித்து வருகிறார். மஞ்சூரில் தனியாக வசித்து வந்த மணிகண்டன்போலீஸ் நிலையம் அருகே ஒரு தகரகூரை வீட்டில் வசித்து வந்தவர். மேலும் மஞ்சூர் கடை பஜாரில் மூட்டை சுமக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர்.
இவருக்கு ஏற்கனவே தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் மரக்கட்டிலின்அருகில் மெழுகுவர்த்தியை கொளுத்திவைத்திருந்ததால்தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் உடல் கருகிய மணிகண்டன் சம்பவ இடத்திலேஉயிரிழந்துள்ளார்.

புகை மூட்டத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர்மஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.மணிகண்டனின் உடலை மீட்டபோலீசார்பிரேத பரிசோதனைக்காக உதகைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றோம்.