கோவையில் போலீசார் விசாரணைக்கு பயந்து வெள்ளி மோதிரத்தை விழுங்கிய தொடர் கஞ்சா குற்றவாளியால் பரபரப்பு…!

கோவை வடவள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த நபர் பிடிபட்ட நிலையில், போலீசாருக்கு பயந்து வெள்ளி மோதிரத்தை விழுங்கியதை அடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


கோவை: கோவை வடவள்ளி பகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர்.

சோதனையில், அவரிடம் 5 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் தொண்டாமுத்தூர் பார்பர் காலனி பகுதியை சேர்ந்த விஜய் (26) என்பது தெரியவந்தது. மேலும், கடந்த மாதம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் 1,200 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து சிறை சென்றவர் என்பதும் சிறையில் இருந்து வெளியில் வந்தவர், மீண்டும் கஞ்சா விற்பனை ஈடுபட்டு வந்ததும், சோதனையில் தெரியவந்தது.

இந்த நிலையில், போலீசார் விசாரணைக்கு பயந்து காவல் நிலையத்தில் விஜய், தன் கையில் அணிந்திருந்த வெள்ளி மோதிரத்தை விழுங்கியுள்ளார்.

இதுகுறித்து சக போலீசாரிடம் வயிறு வலிப்பதாக தெரிவித்தும், தான் மோதிரத்தை விழுங்கியது குறித்தும் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, போலீசார் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வயிற்றை ஸ்கேன் செய்தனர்.

பரிசோதனையில், விஜயின் வயிற்றில் வெள்ளி மோதிரம் இருந்ததை உறுதி செய்த போலீசார், உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர் மூலம் சிகிச்சை கொடுத்து மோதிரத்தை வெளியே எடுத்தனர்.

போலீசார் விசாரணைக்கு பயந்து வெள்ளி மோதிரத்தை விழுங்கிய கைதியால் வடவள்ளி காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...