பாட்னா - எர்ணாகுளம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.2 கோடி மதிப்பிளான போதை ஆயில் பறிமுதல்

தகவலின் பேரில் ரயில்வே குற்றப்புலனாய்வு அதிகாரிகள், திருப்பூர் - கோவை இடையே வந்த ரயிலில் சோதனை மேற்கொண்ட போது, எஸ்-10 பெட்டியில் கவர்களில் 2.2 கிலோ ஹேசிஸ் ஆயில் என்ற போதைக்கு பயன்படுத்தும் ஆயில் இருந்தது தெரியவந்தது.


கோவை: பட்னா எர்ணாகுளம் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட ரூபாய் இரண்டு புள்ளி இரண்டு கோடி மதிப்புள்ளான போதை ஆயிலை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ரயில் திருப்பூர் - கோவை இடையே வந்த போது ரயில்வே குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, எஸ்-10 பெட்டியில் 71 ஆவது இருக்கையின் அடியே மர்ம கவர்கள் இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து 3 பிளாஸ்டிக் கவர்களையும் பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் அதனை சோதனை செய்த போது அதில் 2.2 கிலோ ஹேசிஸ் ஆயில் என்ற போதைக்கு பயன்படுத்தும் ஆயில் இருந்தது தெரியவந்தது.

இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.2.2 கோடி என்று கூறப்படுகிறது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் போதை ஆயிலை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...