இந்திய அளவில் கோவையை தூய்மை நகராக மாற்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க திட்டம் - கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி

தேசிய அளவில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் கோவை மாநகரம் 42வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால், மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து முதலிடத்துக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.



கோவை: புதிய தமிழகம் கட்சி தலைவரும், தாமரை உலக பள்ளி தாளாளருமான டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,



கோவை மாநகரை அகில இந்திய அளவில் தூய்மையானதாக மாற்ற மக்கள் இயக்கம் முன்னெடுக்கப்பட உள்ளது. அரசியல் சாராமல் அனைத்து தரப்பு மக்கள் மூலம் இந்த இயக்கம் செயல்பட உள்ளது.

சமீபத்தில் ஒன்றிய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு துறை ஆய்வு நடத்தி வெளியிட்ட பட்டியலின் படி சத்தீஸ்கர் மாநிலம் இந்தியாவிலேயே 'தூய்மையான முதன்மை மாநிலம்' என்ற பெயரை பெற்றுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரம் தொடர்ந்து 5-வது ஆண்டாக முதலிடமும், சூரத், நவி மும்பை, புனே போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் மிகப்பெரிய தொழில் நகரமாக உள்ள கோவை மாநகரம் 42வது இடத்தையும், சென்னை 44வது இடத்தையும், மதுரை 45வது இடத்தையுமே பெற்றுள்ளன. தூய்மை பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நகரங்கள் வடக்கு மாநில நகரங்களாக உள்ளன.

தமிழகத்தின் பெரு நகரங்கள் தூய்மை இல்லாததன் காரணமாக இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை டெங்கு மலேரியா டைஃபாய்டு போன்ற நோய்கள் வருகின்றன. எனவே தூய்மை நகரமாக மாற்ற காற்று மாசுபடாமல் இருக்க வேண்டும். வீட்டு குப்பைகள் ஆங்காங்கே தேங்குவதை தவிர்க்க வேண்டும்.



கழிவு நீர் தேங்காமல் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இவைகள் தான் தூய்மைக்கான முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. எனவே கோவை பொலிவிழந்து 42வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு தூய்மையானதாக மாற்ற முயற்சி எடுக்க வேண்டும்.

கல்வி, தொழில் வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு தூய்மையில் பின்தங்கி உள்ளது. எனவே குப்பைகளை அகற்றுவது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. நகரங்களை தூய்மையானதாக வைத்தால் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும்.

கோவையில் உள்ள ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற பகுதிகளில் அரசியல் சாராமல் இந்த மக்கள் இயக்கம் முன்னெடுக்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் கோவை மாநகரை இந்திய அளவில் தூய்மை நகரமாக மாற்ற வேண்டும்.

3வது ஆண்டில் முதல் இடத்தை பிடிக்கவும், தாமரை உலக பள்ளி மூலம் தூசில்லா தமிழகம், மாசில்லா கோவை என்ற குறிக்கோளை அடைய அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்கும் மாபெரும் மாரத்தான் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...