பல்லடம் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா, கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை - ஒடிசா மாநில தொழிலாளி கைது

திருப்பூர் பல்லடம் அடுத்த அக்ரி காலனி பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், ஒடிசா மாநில தொழிலாளியை கைது செய்து அவரிடம் இருந்து 250 கிலோ குட்கா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தை அடுத்த அக்ரி காலனி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் அப்பகுதியில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வட மாநில தொழிலாளி ஒருவர் தங்கியிருந்த வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி தேபாபிரட் பிஸ்வால் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 250 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் குட்கா பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்து, ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...