கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே போலி ரூ.2,000 நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர்

பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பிரஸ் காலனி பகுதியில் போலி 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்த விருதுநகரை சேர்ந்த காளிமுத்து, நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமார், மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 கோவில் கலசங்கள், லேப்டாப் மற்றும் 4 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள பிரஸ் காலனி குடியிருப்பு பகுதியில், சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.



இந்த சோதனையின் போது கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் அட்டை பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த நோட்டுகள் அனைத்தும், போலி என்பது தெரியவந்ததை தொடர்ந்து, அந்த வீட்டில் இருந்த விருதுநகரை சேர்ந்த காளிமுத்து, நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமார், மோகன்ராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.



மேலும், அவர்களிடம் இருந்து ஒன்பது அட்டை பெட்டிகளில் இருந்த போலி 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் இரண்டு கோவில் கலசம், லேப்டாப் மற்றும் 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜடகோபால் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் அவர்கள் இரிடியம் இருப்பதாக கூறி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட மோகன்ராஜ், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினரிடம் பணத்தை இருமடங்காக்கி தருவதாக கூறி 2 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினரும் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேலும் இவர்களால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...