திருப்பூரில் 3 சிறுவர்கள் இறப்பிற்கு காரணமான விவேகானந்தா சேவாலய காப்பகம் வருவாய்த் துறையினர் முன்னிலையில் மூடப்பட்டது

திருமுருகன்பூண்டி பகுதியில் 3 சிறுவர்கள் உயிரிழப்புக்கு காரணமான ஸ்ரீ விவேகானந்தா சேவாலய காப்பகம் மூடப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேற்றைய தினம் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை வருவாய்த்துறை முன்னிலையில் காப்பகம் மூடப்பட்டது.



திருப்பூர்: திருமுருகன் பூண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தில் 15 சிறுவர்கள் தங்கி அருகில் உள்ள அம்மாபாளையம் அரசு பள்ளியில் கல்வி பயின்று வந்தனர்.



இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி இரவு காப்பகத்தில் வழங்கப்பட்ட ரசம் சாதம் உண்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மறுநாள் காலை ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது இரண்டு மாணவர்கள் உயிரிழந்ததும், மீதமுள்ள 12 மாணவர்களும், காவலர் ஒருவரும் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், கவலைக்கிடமாக இருந்த மேலும் ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இந்நிலையில், நேற்றைய தினம் (07.10.2022) காப்பகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 11 மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல், மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

அவருடன் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரியான மணிவாசகம் தலைமையிலான குழுவினர் மற்றும் சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி தலைமையிலான குழுவினரும் காப்பகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் காப்பகத்தில் சிறுவர்கள் தங்குவதற்கான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை எனவும் காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதை மற்றும் மெத்தனபோக்கு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதால் காப்பகம் மூடப்படுவதாக அறிவித்தார்.



இதனையடுத்து இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசகம் உள்ளிட்டார் காப்பகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருவாய் துறையினருக்கு காப்பகத்தை மூட உத்தரவிட்டனர்.



இதனை தொடர்ந்து வட்டாட்சியர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் காப்பகத்திற்கு பூட்டு போட்டு மூடப்பட்டது.



மேலும், காப்பகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த மூன்று மாணவர்களின் உடல்களும் அவர்களது, பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து திருப்பூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...