கோவை சித்திரைச்சாவடி பகுதியில் விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம்..!

தொண்டாமுத்தூர் அடுத்த சித்திரைச்சாவடி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: தொண்டாமுத்தூர் அடுத்த சித்திரைச் சாவடி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது விவசாய தோட்டத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் (07.10.2022) காலை வழக்கம் போல கிணற்றின் அருகே சென்று பார்த்த போது அதில் ஆண் சடலம் மிதப்பது போல தெரிந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பார்த்திபன், உடனடியாக தொண்டாமுத்தூர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன், கிணற்றில் இருந்த ஆண் சடலத்தை மீட்டனர்.

மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலமானது, இறந்து சில நாட்களாகி அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள தொண்டாமுத்தூர் போலீசார், சடலமாக மீட்கப்பட்டது யார்? கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாய கிணற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம், அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...