கோவை மாநகராட்சிக்குட்பட்ட சிவானந்தா காலனி சந்திப்பில் இருந்து டாடாபாத் KVB-ATM வரையிலான சாலையில் இன்று பிற்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டிய வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவை: கோவை மாநகரில் சிவானந்தா காலனி சந்திப்பிலிருந்து டாடாபாத் KVB-ATM வரை உள்ள சாலையில் இன்று பிற்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இன்றைய தினம் (08.10.2022) பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கோவை மாநரில் உள்ள சிவானந்தா காலனி சந்திப்பிலிருந்து டாடாபாத் KVB-ATM வரையிலான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து ARC வழியாக வரும் வாகன ஓட்டிகள் டேங்க் ரோடு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி கற்பக விநாயகர் கோயில் வீதி வழியாக டாடாபாத் 1வது வீதியில் இடதுபுறம் திரும்பி சிவானந்தா காலனி அடைந்து, பவர் ஹவுஸ், 100 அடி சாலை வழியாக செல்லலாம்.
100 அடி சாலையிலிருந்து சிவானந்தா காலனி, மேட்டுபாளையாம் சாலைக்கு செல்லும் வாகங்கள் பவர் ஹவுஸ் சந்திப்பு, 105 அடி சாலையை அடைந்து டாடாபாத் 2-வது வீதியில் திரும்பி கற்பக விநாயகர் வீதியில் வலதுபுறம் திரும்பி டேங்க் சாலையை சாலையை அடையலாம்.
ARC சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி தயிர் இட்டேரியை அடைந்து ARC வழியாக மேட்டுப்பாளையம் கருப்பாத்தாள் லேஅவுட் வழியாக ரத்தினபுரியை அடையலாம்.
100 அடி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ரத்தினபுரிக்கு செல்ல 11th Cross வசந்த் & கோ சாலையில் வலதுபுறம் திரும்பி பின் இடதுபுறம் டாடாபாத் 7வது வீதி வழியாக ஆறுமுக்கு சாலையை அடைந்து ரத்தினபுரியை அடையலாம்.
இதன் காரணமாக இவ்வழியாக பயணிக்கும் பொதுமக்கள், போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்றவாறு தங்கள் பயணத்தை திட்டமிட வேண்டும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.