கோவையில் வீட்டுமனை கட்டிட உரிமம், வரைபட அனுமதி பெற லஞ்சம் வாங்கிய பிளிச்சி ஊராட்சி தலைவர் மற்றும் கணவர் கைது

வீட்டு மனை கட்டிட உரிமம் பெற ரூபாய் 15,000 லஞ்சம் கேட்பதாக கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் பேரில், பிளிச்சி ஊராட்சி தலைவர் சாவித்திரி மற்றும் அவரது கணவர் ராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


கோவை: கோவையில் வீட்டுமனை கட்டிட உரிமம், வரைபட அனுமதி பெற ரூ.15,000 லஞ்சம் வாங்கிய பிளிச்சி ஊராட்சி தலைவர் சாவித்திரி மற்றும் கணவர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ஜி.என் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் பெரியநாயக்கன்பாளையம் பிளிச்சி ஊராட்சியில் அவரது மனைவி பெயரில் இரண்டு வீட்டு மனைகள் வாங்கியுள்ளார். மேலும், இந்த இடத்திற்கு வரைபட அனுமதி, கட்டிட அனுமதி பெற அரசு கட்டணத்தை முறையாக செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், வரைபட அனுமதி பெற ரூ.20 ஆயிரம் லஞ்சமாக ஊராட்சி தலைவர் சாவித்திரி, அவரது கணவர் ராஜன் மூலம் கேட்டுள்ளனர். அதற்கு கார்த்திக் அவரிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்ததற்கு ரூபாய் 15,000 லஞ்சமாக கொடுக்க பேரம் பேசியுள்ளனர்.

இது குறித்து கார்த்திக் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்சம் பெற நினைத்த, ஊராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவனை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டு, கார்த்திக்கிடம் ரூபாய் 15,000 பணத்தை அவர்களிடம் கொடுக்கும்படி சொல்லி உள்ளனர்.

அதன்படி இன்று கார்த்திக் அவர்களிடம் பணம் கொடுக்க சென்ற போது, கார்த்தியிடமிருந்து ரூ.15 ஆயிரம் ரூபாயை சாவித்ரி மற்றும் அவரது கணவர் வாங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை பிடித்தனர்.

இதையடுத்து, லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஊராட்சி தலைவர் மற்றும் அவரது கணவர் ராஜனை கைது செய்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் லஞ்சவளக்கில் கைதான சம்பவம் பேச்சு ஊராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...