கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை – வடமாநில இளைஞர்கள் கைது…!

மதுக்கரை, ஈச்சனாரி பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொண்ட சோதனையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் மதுக்கரை அருகே உள்ள ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுக்கரை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீஸார் அங்கு ஆய்வு மேற்கொண்ட போது, சந்தேகத்திடமாக நின்றுக் கொண்டிருந்த வடமாநில இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது, சிறு பொட்டலங்களாக கஞ்சாவை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போது ஒருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம் பரோஸ் சர்மா (21) தனியார் தொழிற்சாலையில் வெல்டிங் வேலை செய்து வந்ததும், மற்றொருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த கோபால்குமார் (19) சமோசா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இருவரும் ஏஜெண்ட் மூலம் கஞ்சாவை வாங்கி அதனை கல்லூரி மாணவர்களை குறி வைத்து ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் 1.150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...