கோவை அருகே குடிபோதையில் நாயை கொடூரமாக தாக்கி கொலை செய்த இளைஞர் மீது வழக்குப்பதிவு

வேலாண்டிபாளையம் அருகே சின்னன்னன் செட்டியார் நகரை சேர்ந்த கார்த்தி என்பவர் நாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில், அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: வேலாண்டிபாளையம் அருகே இளைஞர் ஒருவர் குடிபோதையில் நாயின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலாண்டிபாளையம் அருகேயுள்ள சின்னன்னன் செட்டியார் நகரை சேர்ந்த லட்சுமி என்பவர் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.



அதில், சின்னன்னன் செட்டியார் நகரை சேர்ந்த கார்த்தி என்பவர், குடிப்போதையில் தனது வீட்டின் முன்பு, உறங்கி கொண்டிருந்த நாயின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்ததாகவும், இறந்த நாயின் உடலை சாலைப்பகுதிக்கு இழுத்துச் சென்று மீண்டும் கொடூரமாக தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட கார்த்தி என்பவரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அவரது புகாரின் பேரில், நாயை கொடூரமாக தாக்கி கொலை செய்த கார்த்தி என்பவர் மீது, போலீசார், மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...