கோவை பெரியநாயக்கன்பாளையம் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை - இருவர் கைது

தனிப்படை போலீசாரின் சோதனையில், இடிகரை பகுதியைச் சேர்ந்த ஜெயமுருகன் மற்றும் மேட்டுப்பாளையம் அடுத்த சேரன் வீதியை சேர்ந்த சிவகாமி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 169 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெ.நா.பாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இடிகரை பகுதியைச் சேர்ந்த ஜெயமுருகன் (35) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து, 102 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், மேட்டுப்பாளையம் பகுதியில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த சேரன் வீதியைச் சேர்ந்த பாபுராஜ் என்பவரின் மனைவி சிவகாமியை (49) கைது செய்தனர். அவரிடமிருந்தும் 67 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் உள்பட மொத்தம் 169 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை 94981-81212 என்ற தொலைபேசி எண்ணிலும், வாட்ஸ்அப்பில் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கலாம், என காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...