கோவை ஒண்டிப்புதூர்‌ நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தில் திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநிலக் கண்காணிப்பு குழு தலைவர் ஆய்வு

கோவைக்கு வந்துள்ள நீதியரசர் முனைவர் ப.ஜோதிமணி தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுவினர் ஒண்டிப்புதூர்‌ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகேயுள்ள நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநிலக் கண்காணிப்புக் குழுவினர் தமிழகம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, நேற்று கோவை வந்துள்ள கண்காணிப்பு குழுவின், தலைவர் நீதியரசர் முனைவர். ப. ஜோதிமணி தலைமையிலான குழுவினர் கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.



இந்நிலையில், இன்று கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட ஒண்டிப்புதூர்‌ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகேயுள்ள நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தின்‌ (Micro Composting Centre) செயல்பாடுகள்‌ குறித்து கண்காணிப்பு குழுவின் தலைவர்நீதியரசர்‌ ப.ஜோதிமணி நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்த ஆய்வின் போது, கோவை மாநகர மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப், மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா, கிழக்கு மண்டல தலைவர்‌ இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்‌, மாமன்ற உறுப்பினர்‌ சாந்தாமணி, நகர்‌ நல அலுவலர்‌ மரு.பிரதீப்‌ வாசுதேவன்‌ கிருஷ்ணகுமார்‌ மண்டல சுகாதார அலுவலா்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்‌.



Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...