தாளியூர் பகுதியில் அடுத்தடுத்து 3 விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை..!

கடந்த மூன்று நாட்களாக தேவராயபுரம், வண்டிக்காரன்புதூர், விராலியூர், தாளியூர் கிராமங்களில் உலா வரும் ஒற்றை காட்டு யானை விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தக்காளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.



கோவை: தொண்டாமுத்தூர் அடுத்த தாளியூர் பகுதியில் விவசாய தோட்டத்தில் இருந்த இரும்பு கதவை உடைத்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த வாழை, தக்காளி மற்றும் கீரை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள தாளியூர் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன் விவசாய நிலங்களுக்குள் சுமார் 10 யானைகள் கொண்ட யானை கூட்டம் உள்ளே சென்று அட்டகாசம் செய்து வந்தன. பெரும் போராட்டத்திற்கு பின், வனத்துறையினர் அந்த யானை கூட்டத்தை மதுக்கரை வனப்பகுதிக்கு விரட்டினர்.

இதனால் கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக தேவராயபுரம், வண்டிக்காரன்புதூர், விராலியூர், தாளியூர் கிராமங்களில் உலா வரும் ஒற்றை காட்டு யானை விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளவாழை, தக்காளியை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு தாளியூர் பகுதிக்கு வந்த ஒற்றைக் காட்டு யானை அடுத்தடுத்து மூன்று தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, தக்காளி, கீரை ஆகியவற்றை சேதப்படுத்தியது.



அதனைத் தொடர்ந்து, நாகராஜ் என்பவரதுதோட்டத்திற்குள் புகுந்த யானை அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்திவிட்டு வெளியே வர முயன்ற போது தோட்டத்தை சுற்றியும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டிருந்ததால், அங்கிருந்த இரும்பு கதவை உடைத்துக் கொண்டு யானை வெளியே வந்தது. இதையடுத்து நரசீபுரம் சாலையில் அந்த ஒற்றை யானை நடந்து சென்று வனப்பகுதிக்குள் புகுந்தது.

ஒற்றைக் காட்டு யானை இரும்பு கதவை உடைத்து விட்டு, வெளியே செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும்,பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபடும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் யானைகள் வருவதை தடுக்க வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...