வால்பாறை நகராட்சியை கண்டித்து ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுக்கப்பட்ட பணிகளுக்கான தொகை இன்னும் வரவில்லை என்று குற்றம்சாட்டி வால்பாறை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்ததாரர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சுமார் 50 மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் நகராட்சி வேலைகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டில், நகராட்சியில் பல்வேறு வேலைகளுக்கு ஒப்பந்தம் புள்ளிகள் பெற்று வேலைகளை செய்து முடித்தும் அதற்கான ஒப்பந்த தொகையான பல லட்சம் ரூபாய் இது நாள் வரை கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், 2020-ம் ஆண்டில் அப்போதய ஆணையாளர் பல கோடி ரூபாய் மோசடி செய்தார் என்ற காரணத்தை கூறி எங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை வழங்காமல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.



ஒப்பந்த பணிகளுக்கான தொகையை இன்னும் கொடுக்காததால் ஏராளமான ஒப்பந்ததாரர்கள் இன்று பட்டினியால் அவதிப்படுவதாகவும், இது குறித்து அரசிற்கு பல முறை மனுக்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...