பொள்ளாச்சியில் வீட்டில் பாலியல் தொழில்: பெண் புரோக்கர் கைது - 2 இளம்பெண்கள் மீட்பு

பி.கே.எஸ் காலனி பகுதியில் வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த 55 வயது பெண் புரோக்கரை கைது செய்த போலீசார், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 2 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்த பி.எஸ்.காலனி பகுதியில் வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் புரோக்கரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 பெண்களை மீட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள பி.கே.எஸ் காலனி பகுதியில் வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில், திவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், வீட்டில் 2 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து புரோக்கராக செயல்பட்ட 55 வயது பெண்ணை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 2 இளம்பெண்களை மீட்ட போலீசார், அவர்களிடம் அறிவுரை கூறி காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு, 2 இளம்பெண்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...