ஈஷா லிங்கபைரவியில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வித்யாரம்பம்..!

இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முள்ளாங்காடு, முட்டத்துவயல், செம்மேடு, இருட்டுப்பள்ளம், நரசீபுரம், ஆலாந்துறை, போளுவாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் லிங்கபைரவி தேவியின் முன்னிலையில் வித்யாரம்பம் செய்து கொண்டனர்.


கோவை: விஜயதசமி தினமான இன்று (அக்.5) ஈஷா யோகா மையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் லிங்கபைரவியில் ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



கல்வி மற்றும் பல்வேறு விதமான கலைகளை கற்க விரும்பும் குழந்தைகள் விஜயதசமி தினத்தன்று ‘வித்யாரம்பம்’ மேற்கொள்வது வழக்கம். அதன்படி, ஈஷாவில் உள்ள லிங்கபைரவியில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முள்ளாங்காடு, முட்டத்துவயல், செம்மேடு, இருட்டுப்பள்ளம், நரசீபுரம், ஆலாந்துறை, போளுவாம்பட்டி, காளம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் லிங்கபைரவி தேவியின் முன்னிலையில் வித்யாரம்பம் செய்து கொண்டனர்.



சுற்றுவட்டார கிராமங்களில் வாழும் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக ஈஷா அவுட்ரீச் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி,சந்தேகவுண்டம்பாளையத்தில் செயல்படும் ஈஷா வித்யா மெட்ரிக் பள்ளியில் 69 பழங்குடி குழந்தைகள் முழு இலவச கல்வி பெறுகின்றனர்.

மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் பழங்குடி குழந்தைகளுக்கு தினமும் இலவச போக்குவரத்து வசதியும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும் ஈஷா வழங்கி வருகிறது.

இதனால், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...