கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் கைதானோர் வீடுகளில் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை..!

கோவையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சின் பின்புலத்தில் இருப்பவர்கள் குறித்து அறிய, கைது செய்யப்பட்ட 9 பேரின் வீடுகளில் புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில்பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 9 பேரின் வீடுகளில் புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் பாஜக அலுவலகம் தொடங்கி, இந்து முன்னணி பிரமுகர்கள் வீடு என ஆறு இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள்வீசப்பட்டன. இந்த சம்பவங்களால் பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் பொதுமக்களிடையே பதற்றம் உச்சத்தை தொட்டது என்றால் அது மிகையல்ல.

பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இதில், கைதான பெரும்பாலானோர் தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ அமைப்பைச் சார்ந்தவர்கள் ஆகும்.

இந்த நிலையில் கைதான நபர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். அதற்கு முன்னதாக கைதானவர்களின் வீடுகளில் சோதனை நடத்த முடிவு செய்து, இந்த வழக்கின் புலன் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தலைமையின் கீழ் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

நேற்றைய தினம் அதிரடியாக நடைபெற்ற இந்த சோதனையில், பல்வேறுஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், இது குறித்தான விவரங்கள் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைதானவர்கள் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள்..? என்பது குறித்த விவரங்களை அறியவே கைதானவர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சோதனை குறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், கைதானோர் அனைவரும் ஒரு சாரார் என்பதனால் இதன் பின்புலத்தில் உள்ள நபர்களை கண்டறிந்து எதிர்காலத்தில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் காவல்துறை உள்ளதால்,அதன் அடிப்படையிலேயே கைதான 9 பேரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு இருக்கின்றன.

விரைவில் சோதனையின் அறிக்கையை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பார்வைக்கு செல்லும் என்றும் அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்படும் என்று தெரிவித்தன.

கோவையில் வரும் காலங்களில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க குற்றவாளிகளை கடந்து, குற்றவாளிகளின் பின்புலத்தில் இயங்கும் சக்திகளையும், களை எடுக்க காவல்துறை தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...