கோவையில் மாட்டிறைச்சி கடையை மூடச்சொல்லி மதுபோதையில் தகராறு - இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் கைது

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மாட்டிறைச்சி கடையை மூட வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த மூவர், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட நிலையில், கடை உரிமையாளரின் புகாரின் பேரில் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே மதுபோதையில் மாட்டிறைச்சி கடையை மூடச்சொல்லி தகராறில் ஈடுபட்ட, இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனி, பி.எஸ்.ஜி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் முகமது சிக்கந்தர்(32). இவர் அதே பகுதியில் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், சிறிது நேரம் கழித்து முகமது சிக்கந்தர் சாப்பிடுவதற்காக பிற்பகலில் வீட்டிற்கு சென்றுள்ளார். கடையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞர் மட்டும் கடையை கவனித்து வந்துள்ளார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க 3 பேர் கடைக்கு வந்து, கடையில் இருந்த இளைஞரிடம், ஏன் கடையை திறந்து வைத்துள்ளாய்..? கடையை மூடி விட்டு வீட்டிற்கு செல் என்று மிரட்டும் தோணியில் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கடையின் ஷட்டரை பிடித்து கீழே இழுத்துள்ளனர். இதனால் பயந்து போன அந்த இளைஞர், கடையில் இருந்து வெளியில் ஓடி வந்து, கடையின் உரிமையாளரான முகமது சிக்கந்தருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து முகமது சிக்கந்தர் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்த போலீசார், தகராறில் ஈடுபட்ட 3 பேரையும் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், மாட்டு இறைச்சி கடையை மூட சொல்லி தகராறு செய்தது இந்து முன்னணி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொது செயலாளர் சண்முகம்(40), ஜோதிபுரம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வினோத்(32), ஜோதிபுரம் ஒன்றிய தலைவர் முருகன்(48) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும் நேற்று மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், மாட்டு இறைச்சி கடையில் இருந்த வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டு கடையை மூட சொல்லியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மது போதையில் மாட்டு இறைச்சி கடையை மூடச் சொல்லி தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...