திருப்பூரில் விஜயதசமியை முன்னிட்டு அய்யப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி; நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்பு..!

வித்யாரம்பம் நிகழ்ச்சியை முன்னிட்டு திருப்பூரில் உள்ள ஐயப்பன் கோவில்களில் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து வித்யாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


திருப்பூர்: நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை. இதனால் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக்கருவிகள், நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவது வழக்கம்.

இதற்காக குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அய்யப்பன் கோவில்களில் நடைபெறும்.



அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்த நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடை பெற்று வருகிறது.

அதிகாலை எழுந்து நீராடி சாமி தரிசனம் செய்து விட்டு பலரும் தங்களது குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அய்யப்பன் கோவில்களுக்கு சென்றனர்.

திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 9&வது ஆண்டு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.



இதனையோட்டி, காலை முதலே பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்தனர்.



பின்னர், குழந்தைகளின் நாவில் கோவில் நம்பூதிரிகள் தங்க வேலால் எழுதி, கல்விச் செல்வம் பெற இறையருள் கிடைக்க வாழ்த்தினர்.



அதேபோல, அரிசியிலும் தமிழ் எழுத்துகளை மற்றும் வார்த்தைகளை எழுத வைத்தனர். இதன் பின்னர், சிலேட்டுகளில் குழந்தைகளை பெற்றோர் அ, அம்மா, தமிழ் போன்றவற்றை எழுத வைத்தனர்.



தொடர்ந்து, 98வது ஆண்டாக நடக்கும் இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், சுமார் 1500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.



இதனால், அய்யப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...