கோவை நகை கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய 13.5 கிலோ தங்க நகை கையாடல் வழக்கு: பெங்களூர் நகைக்கடை ஊழியர் கைது...!

கோவையில் உள்ள நகை கடைகளுக்கு விநியோகம் செய்ய கொடுக்கப்பட்ட 6.5 கோடி மதிப்பிலான 13.5 கிலோ தங்க ஆபரணங்களை கையாடல் செய்த வழக்கில், பெங்களூர் அன்மோல் ஜுவல்லரி ஊழியரான அனுமன் துவேசி என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு 25 வருடமாக அன்மோல் ஜுவல்லரி என்ற மொத்த தங்கநகை வியாபாரம் செய்யும் இயங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் பிரபலமாக இயங்கி வரும் நகைக்கடைகளுக்கு தங்க நகை ஆபரணங்களை ஆர்டரின் பெயரில் தயாரித்து மொத்த விலையில் அல்மோன் ஜுவல்லரி விற்பனை செய்து வருகிறது.

இந்த நகை கடையில் மார்கெட்டிங் பிரிவின் மேலாளராக பணியாற்றுபவர் ராஜஸ்தானை சார்ந்த அனுமன் துவேசி என்பவர். இவர், ஆர்டரின் பேரில் கோவையில் உள்ள அந்தந்த நகைக்கடைகளுக்கு பத்திரமாக நகைகளை ஒப்படைப்பது அதற்கான ரசீது பெற்று பெங்களூருக்கு அனுப்பி பணம் பரிவர்த்தனைகளை கையாண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை 13.5 கிலோ தங்க நகைகளை பெங்களூரிலிருந்து கோவைக்கு விநியோகம் செய்ய கொண்டு வந்திருக்கின்றார். அப்போது, நகைகளை ஆர்டர் கொடுத்த நகை கடைகளுக்கு விநியோகம் செய்யாமல், இருந்துள்ளார்.

இந்த நிலையில் அன்மோல் ஜுவல்லரி உரிமையாளர் சக்னால் காட்ரி விநியோகம் செய்யப்பட்ட நகைகளுக்கான பண பரிவர்த்தனை இன்னும் வரவில்லை என்பது தொடர்பாக அனுமன் தூவேசிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், அவரது கேள்விகளுக்கு அனுமன் துவேசி முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த அனுமான் ஜுவல்லரி கடை உரிமையாளர் காட்ரி, நகை கையாடல் செய்ததனை உணர்ந்து கோவை வெரைட்டி ஹால் போலீசில் புகார் தர முடிவெடுத்தார். அதன்படி, 13.5 கிலோ எடையுள்ள ரூபாய் 6.5 கோடி மதிப்பிலான தங்கம் கையாடல் செய்ததாக வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் அனுமன் துவேசி ம3எது புகார் தரப்பட்டது.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஆய்வாளர் பாண்டியம்மாள் தலைமையில் தனிப்படை அமைத்து நகை கையாடல் குறித்து புலன் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் அடிப்படையில் நகைக்கடை ஊழியர் அனுமன் துவேசி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து நகைகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது

இந்த நிலையில், கடையின் முன்னாள் ஊழியரான தல்பத் சிங் என்ற நபரை தேடி தனிப்படை போலீசார் தீவிர புலன் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

13.5 கிலோ மதிப்பிலான நகைகளை எப்படி கையாடல் செய்தார்..? முன்கூட்டியே கையாடல் செய்ய திட்டம் தீட்டினாரா? என பிடிபட்ட அனுமன் துபேசியிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...