கோவையில் பசுமை வீடு குறித்து மனு அளிக்க வந்த பெண் மாயம்; சூலூர் போலீசார் தீவிர விசாரணை

பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பசுமை வீடு வேண்டி குறை தீர்ப்பு நாளன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்று, வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


கோவை: கோவை பாப்பம்பட்டி பகுதியில் வசிப்பவர் தீபக். பீகாரை சேர்ந்த இவர் 12 ஆண்டுகளுக்கு முன் பாப்பம்பட்டிக்கு வந்துள்ளார். பின்னர், அதேபகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் பசுமை வீடு வாங்க இவர்கள் முயன்று வந்துள்ளனர். இது குறித்து ஆட்சியர் அலுவலகத்துக்கு,குறைதீர் முகாமிற்கு வந்த சரண்யாவீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.



மேலும், சரண்யாவின் கணவர் மற்றும்குடும்பத்தார் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...