சாலையோர நடைபாதை வியாபாரிகளால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது - பல்லடத்தில் கடை உரிமையாளர்கள் சாலை மறியல்

பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் அமைந்துள்ள கடை உரிமையாளர்கள், தாங்கள் நகராட்சிக்கு இலட்சக்கணக்கில் வரி செலுத்தி கடை நடத்தி வரும் நிலையில், தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் செயல்படும் நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: பல்லடம் என்.ஜி.ஆர்.சாலையில் உள்ள சாலையோர நடைபாதைவியாபாரிகளால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கடை வியாபாரிகள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் நகரின் மையப் பகுதியான என்.ஜி.ஆர்.சாலையில் நகராட்சி வணிக வளாகம் மற்றும் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் 100 க்கும் மேற்பட்ட கடைகளை வைத்து வியாபாரத்தில் இப்பகுதி வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக என்.ஜி.ஆர். சாலையில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரிகள் சிலர் தள்ளு வண்டிகளிலும் தரையில் அமர்ந்தும் வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, நகராட்சிக்கு இலட்சக்கணக்கில் வரி செலுத்தி கடை நடத்தி வரும் வியாபாரிகள் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால், வரி செலுத்தாத நடை வியாபாரிகளின் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

இது குறித்து, பல ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்திடம் நடைபாதை கடைகளை அகற்ற கோரி மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்றும் இதனால் சாதாரண மற்றும் பண்டிகை காலங்களில் தங்களுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறி 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் என்.ஜி.ஆர். சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து ,அங்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.



இந்நிலையில், நடைபாதை கடைகளை நகராட்சி நிர்வாகம் அகற்ற முயல்வதாக கூறி நேற்று சாலையோர வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

சாலையோர வியாபாரிகள் மற்றும் கடை வியாபாரிகள் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தி வருவது என்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...