மார்பகப் புற்றுநோய் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள டிஜிட்டல் புத்தகம் மூலம் மார்பகப் புற்றுநோய் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள முடியும் என மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி, கோவைஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்த டிஜிட்டல் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ”உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மார்பகப் புற்றுநோய் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் மாதம்முழுவதும் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இந்தியா உள்பட வளர்ந்து வரும் பல்வேறு நாடுகளில் மார்பக புற்றுநோய் என்பது மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது. கட்டுப்பாடற்ற உயிரணு வளர்ச்சியே இந்த நோயின் தன்மை. மார்பகத்துக்குள் கட்டியாக உருவாகும் இது சிகிச்சை அளிக்கக் கூடிய ஒரு புற்றுநோய் ஆகும். ஆரம்பக் கட்டத்தில் கண்டுபிடிக்கா விட்டால் உடலின் பிற பாகங்களுக்கும் பரவி இந்த புற்றுநோய் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடும்.
எந்த வயதிலும் ஏற்படக்கூடிய இந்த புற்றுநோய் குறிப்பாக 40 வயதிற்கும் மேற்பட்ட பெண்களிடையே அதிகமாக காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவ்வகை புற்றுநோய்க்கு விழிப்புணர்வு என்பது மிக முக்கியமாக கருதப்படுவதை அடுத்து, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைமற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.ஆர்.ஐ.ஓ.ஆர்.) சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு டிஜிட்டல்புத்தகத்தைவெளியிடும் நிகழ்ச்சி மருத்துவமனையில்நடைபெற்றது.
இந்தியாவிலேயே முதன்முறையாக வெளியிடப்படும் இந்த விழிப்புணர்வு டிஜிட்டல் புத்தகத்தை எஸ்.என்.ஆர். சன்ஸ் தொண்டு அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி (Chief Operating Officer)சுவாதி ரோகித் வெளியிட்டார்.
டிஜிட்டல் புத்தக வெளியீடு குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோயியல் மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் பி.குகன் கூறியதாவது: "மார்பக புற்றுநோய்க்கு எதிராக உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் மாதம் உலக மார்பகபுற்றுநோய் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.மேலும், இந்த மாதம் இளஞ்சிவப்பு மாதமாகவும் (Pink Month) அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் மார்பக புற்றுநோய் பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் அது பற்றிய விழிப்புணர்வை அக்டோபர் மாதத்தில்உடல் பரிசோதனை மூலம் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பரிசோதனையின் போது சுமார்2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, 2020 ம் ஆண்டு தேசிய புற்றுநோய் பதிவு திட்டப்படி வருகிற 2025 ம் ஆண்டில் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும்மேற்பட்ட பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புள்ளி விவரங்களை கருத்தில் கொண்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோயியல் மற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.ஆர்.ஐ.ஓ.ஆர்.) மூலம் அனைத்து வகையான புற்று நோய்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஆச்சரியமூட்டும்வகையில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.அதன்படி முன்கூட்டியே மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டால் அந்த பெண்கள் மார்பகங்களை இழக்க வேண்டியது இல்லை. வாழ்க்கையையும் தொலைக்க வேண்டியதில்லை", என்று பேசினார்.
நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகச்சை மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாகிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.