காந்தி ஜெயந்தியையொட்டி கேத்தி பேரூராட்சியில் கிராம மக்கள் சார்பில் நூலகம் திறப்பு.

சோகத்துரை சக்கலட்டி கிராம பொதுமக்கள் இணைந்து அனைவரும் பயன்பெறும் விதமாக உருவாக்கப்பட்ட நூலகமானது காந்தி ஜெயந்தியையொட்டி திறக்கப்பட்டது.


நீலகிரி: உதகை அருகேயுள்ள கேத்தி பேரூராட்சியில் பொதுமக்கள் இணைந்து உருவாக்கிய நூலகம் காந்தி ஜெயந்தியையொட்டி திறக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கேத்தி பேருராட்சிக்கு உட்பட்ட சோகத்துரை சக்கலட்டி கிராமத்தில் கிராம மக்கள் இணைந்து நூலகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அனைவரும் பயன் பெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூலகமானது, காந்தி ஜெயந்தி விழாவையொட்டி திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக சக்கலட்டி சமுதாய கூடத்தில் தேசிய கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதில் ஊர் தலைவர் ராஜி, சிவயோகி, சிவக்குமார், பேருராட்சி வார்டு உறுப்பினர் நிரோஷா, ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

இந்த நூலகமானது, பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...