பந்தலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தையை மீட்ட வனத்துறை.

அத்திசால் பகுதியில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிய சிறுத்தையை வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி பத்திரமாக மீட்டனர்.


நீலகிரி: பந்தலூர் அருகேயுள்ள அத்திசால் பகுதியில் காபி தோட்டத்தில் இருந்த சுருக்கு கம்பியில் சிக்கி உயிருக்கு போராடியசிறுத்தையைவனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி பத்திரமாக மீட்டனர்.

பந்தலூா் தாலுகா சேரம்பாடி வனச்சரகத்துக்கு உள்பட்டது அத்திச்சால் கிராமம். இந்த பகுதியில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிருக்குப் போராடி வருவதாக வனத்துறையினருக்கு கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனா். ஆனால், சிறுத்தை ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்ததால் சிறுத்தையை மீட்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

இதனையடுத்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மயக்கமடைந்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

பின்னா், காயமடைந்த சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுருக்கு கம்பி வைத்த தோட்ட உரிமையாளா் மாத்யூ (69) தலைமறைவாகி உள்ளதால், உடனிருந்த அவரது உறவினா் அனீஷ் (39) என்பவரை வனத் துறையினா் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...