கால்நடை வளங்களை ஊக்குவிக்கும் வகையில் வாணவராயர் அறக்கட்டளையின் சார்பில் கொங்குநாடு கால்நடை திருவிழா


வாணவராயர் அறக்கட்டளை, சங்கர் வானவராயர் மற்றும் அவரது குடும்பத்தினரால் கட்டமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் நோக்கம் கலை, பாரம்பரியம், கட்டமைப்புகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாத்து, பராமரித்து, பறைசாற்றும் அறப் பணிக்கானது.

விவசாயிகளின் வாழ்வாதாரம், வேளாண்மை மற்றும் கால்நடை வளங்களை ஊக்குவிக்கவும் கொண்டாடவும், ‘கொங்குநாடு கால்நடை திருவிழாவை’ இவ்வறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. 

பண்டை காலம் முதலே நமது வாழ்வின் ஓர் அங்கமாக வீட்டு விலங்குகள் இருந்துள்ளன. அதிலும், குறிப்பாக கால்நடை செல்வங்களின் பங்கு முக்கியமானது. 

தற்போது நம் மண்ணின் கால்நடை செல்வங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இவ்வாறான  கால்நடைகளின் கலாச்சார பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைப்பதோடு நில்லாது இவ்வளம் குன்றாதிருக்க விஞ்ஞான ரீதியான அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இந்த கொங்குநாடு கால்நடை திருவிழாவின் நோக்கமாகும்.



இவ்வருடம் தொடர்ந்து 3 வது முறையாக, சமத்தூர், பொள்ளாச்சியில், 2017 பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இவ்விழாவில் தென்னிந்தியா முழுவதிலிருந்தும் 1300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்க உள்ளன. 

வேளாண்மை மற்றும் வீட்டு விலங்குகள் தொடர்பான கண்காட்சியும், ஆடு, மாடு, குதிரைகளின் அழகு போட்டியும், இதர கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இந்த விழாவை காண 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவ்விழா 108 கோமாதா பூஜையுடன் தொடங்கவிருக்கின்றது. இவ்விழாவுக்கான பதிவு வரும் சனிக்கிழமை பிப்ரவரி 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவ்வாண்டு கால்நடைக்கான போட்டிகளில் நாய் இனமும் சேர்க்கப்பட்டிருக்கின்றது என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...