கோவையில் சிறு குறு தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம் - இயந்திரங்களுக்கு வாழை இலையில் படையிலிட்டு வழிபாடு

இயந்திரங்களுக்கு பூசையிட்டு, படையல் வைத்து ஆயுத பூஜையை கொண்டாடிய ஊழியர்கள், ஆண்டு முழுவதும் எங்களுக்காக உழைக்கும் மெசின்களுக்கு ஒரு நாள் ஓய்வு தந்து உரிய மரியாதை செய்வதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


கோவை: கோவையில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களில், ஸ்பேனர், மெசின்கள், பம்பு செட்களுக்கு வாழை இலை படையல் வைத்தும், பூமாலை அணிவித்தும் ஆயுதபூஜை விழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

கொரோனாவிற்கு பின் புத்துயிர் பெற்ற ஆயுத பூஜை

'ஆயுத பூஜை' என்று சொன்னாலே 'புதுப்பொலிவு' என்று பொருள்படும் அளவுக்கு பூஜைகள் அரங்கேறும். வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வீட்டில் உள்ள பொருட்களுக்கு எவ்வாறு பூஜைகள் செய்யப்படுகிறதோ, அதேபோல, அலுவலகங்கள் மட்டும் தொழிற்சாலைகளில் ஆயுத பூஜைகள் களைகட்டும்.

ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக கோவையில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜைகள் பெயரளவிலேயே நடைபெற்றன.

ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பட்டால் பல நிறுவனங்கள் மூடப்பட்டன, திறக்கப்பட்ட நிறுவனங்களிலும் கட்டுப்பாடுகளுடன் பணிகள் நடந்ததாலும் ஆயுத பூஜை சிறப்பாக நடைபெறவில்லை என்பதே உண்மை.

ஆனால், ஊரடங்கு முழுமையாக திரும்ப பெறப்பட்ட பின்னர் முதல் முறையாக ஆயுத பூஜை இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.



கோவையில் உள்ள பம்பு செட் மின் மோட்டார், டெக்ஸ்டைல் உதிர் பாகம் தயாரிப்பு, ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மெஷின்களுக்கு பூ, பழம், மாலை என படையலிட்டு மரியாதை



சிறு, குறு தொழில்களின் முதன்மையான உபகரணமாக இருக்கும் மெஷின்களுக்கு வாழை மரங்கள் கட்டி, பூ மாலையிட்டு சந்தனம் குங்குமம் பூசி, காகித தோரணங்களால் ஆயுத பூஜை களைகட்டியுள்ளது.



அதேபோல் சிறு சிறு தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பம்பு செட், மின் மோட்டார் உள்ளிட்ட தயாரிப்பு பொருட்களும் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளன.



பல்வேறு தொழிற்சாலைகளில் தொழில் சிறக்க லாபம் பெறுக சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.



இதுவும் கடந்து போகும்...!

மூலப் பொருட்களின் விலை ஏற்றம் சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை கடந்து இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள் இனிவரும் காலக்கட்டத்தில் எந்த தொழில் நெருக்கடியும் இல்லாமல் சிறு, குறு தொழில் வீறு நடை போட வேண்டும் என்பதே முதலாளிகள் மற்றும் தொழிலாளிகளின் இந்த ஆயுத பூஜை வேண்டுதலாக உள்ளது என்றால் அது மிகையாகாது.

வருடம் முழுவதும் தங்களுக்காக ஓடி உழைக்கும் இயந்திரங்களுக்கு ஒரு நாள் ஓய்வு தந்து உரிய மரியாதை செய்வது எங்களின் கடமை என்று தெரிவிக்கும் தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு, தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியங்கள் கிடைக்கப்பெற்று, அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுதலாக உள்ளது என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...