பல்லடம் அருகே சாலையோர நடைபாதை வியாபாரிகள் திடீர் சாலை மறியல் - பரபரப்பு..!

பல்லடம் மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டி கடைகளை அமைத்திருந்த சாலையோர நடைபாதை வியாபாரிகளிடம் நகராட்சி அதிகாரிகள் கடைகளை அகற்ற வலியுறுத்திய நிலையில், வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடத்தில் சாலையோர நடைபாதை வியாபாரிகள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

ஆயுத பூஜையை முன்னிட்டு பல்லடம் மார்க்கெட்டுக்கு முன்புறம் நடைபாதை வியாபாரிகள் தள்ளுவண்டியில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் திடீரென அங்கு வந்த பல்லடம் நகராட்சி அதிகாரிகள் கடைகளை போடக்கூடாது எனக் கூறியுள்ளனர்.



மேலும் நடைபாதை வியாபாரிகளின் தள்ளுவண்டியை நகராட்சி ஊழியர்கள் மூலம் பறிமுதல் செய்ய முயன்றதால், நடைபாதை வியாபாரிகளுக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பல்லடம் நகராட்சி சார்பில் முக்கியமான பண்டிகை தினத்தில் கடைகளை போடக்கூடாது என தெரிவிப்பதற்கு நூற்றுக்கு மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



இதனை தொடர்ந்து, பல்லடம் என்ஜிஆர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நடைபாதை வியாபாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் காரணமாக மார்க்கெட் பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பல்லடம் நகர நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...