திருப்பூரில் உடல்நலக்குறைவால் விடுமுறை எடுத்த மாணவருக்கு டி.சி கொடுத்த சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம்..!

அருள்புரத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவருக்கு, டிசி கொடுத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் கல்வியை தொடர வழிவகை செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: வெள்ளியங்காடு அருகே உடல்நலக்குறைவு காரணமாக பள்ளிக்கு 10 நாள் விடுமுறை எடுத்த 12ஆம் வகுப்பு மாணவருக்கு மாற்றுச் சான்றிதழை வழங்கிய சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவரின் தாயார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவரது மகன், திருப்பூர் அருள்புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பிரிவில் கல்வி பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது மாணவருக்கு உடல் நல குறைவு காரணமாக பத்து நாட்கள் விடுமுறை எடுத்ததால், பள்ளி நிர்வாகம் தங்கள் மகனால் சிபிஎஸ்சி கல்வியை தொடரும் அளவிற்கு தகுதி இல்லை என பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து மாற்றுச்சான்றிதழை வழங்கி உள்ளனர்.

மேலும் தங்கள் மகனுக்கு வேறு பள்ளிகளில் இடம் கிடைக்கும் என கூறி நம்பிக்கை கொடுத்து திரும்பி அனுப்பியுள்ளனர். இதனை நம்பி மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொண்டு மற்ற பள்ளிகளுக்கு சென்றபோது சிபிஎஸ்இ பள்ளியில் பயின்ற மாணவரை இடையில் பள்ளியில் சேர்த்த இயலாது எனக் கூறி திருப்பி அனுப்பி உள்ளனர்.



இந்த நிலையில், தனது மகனின் கல்வியை தொடர முடியாத சூழலில், மகனை பள்ளியில் இருந்து பாதியில் நிறுத்திய பள்ளியின் மீது நடவடிக்கை எடுத்து, மகனின் கல்வி தொடர வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவரின் தாயார் சீதாலட்சுமி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனுவை அளித்தார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...