கோவை மாநகர ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் - மேயர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

ஊதிய உயர்வு, நிரந்தர பணி உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம், மாநகராட்சி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி மேயர் தலைமையில், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாட்டு ஏற்பட்ட நிலையில் தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

குறைந்த பட்ச ஊதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி முதல் கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.



கடந்த 3 நாட்களாக கோவை மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் சுமார் 2,000 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆங்காங்கே சுகாதார பணிகளில் தொய்வு ஏற்பட்டது.



தொடர் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து நேற்றைய தினம் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணியாற்றும் 300 தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பெண்களுக்கான ஓய்வெடுக்கும் இடம் உள்ளிட்டவை கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததன் பேரில், இ.எஸ்.ஐ மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் மட்டும் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.

இந்நிலையில் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் பெரிய அளவு உடன்பாடு ஏற்படவில்லை.



அதனால் மூன்றாவது நாளாக இன்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் போராட்டமானது தொடர்ந்தது.



இன்று காலை 500 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோவை பிரதான மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காலவரையாற்ற வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வந்தனர்.



இந்த நிலையில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா தலைமையில், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், 9 தூய்மை பணியாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சு வார்த்தையில் தூய்மை பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபடாத தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளே வந்தபோது பேச்சுவார்த்தையை புறக்கணித்து தூய்மை பணியாளர் சங்கப் பிரதிநிதிகள் வெளியேறியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு தங்களது கோரிக்கைகள் மீதான விவாதங்களை மேற்கொண்டனர். இதையடுத்து பேச்சுவார்த்தை நிறைவடைந்து தூய்மை பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து வருகின்ற மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

அதேபோல் தற்போது போராட்டம் தொடர்பாக தூய்மை பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காரணம் கேட்கும் குறிப்பாணை விளக்க பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தீர்மானித்துள்ளனர். இதன் மூலம் தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கத்தினருடன் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட அமைதிப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.



இதனை அடுத்து போராட்டத்தை தற்போது வாபஸ் பெற்றுக் கொள்வதாக போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.



இதைத்தொடர்ந்து, மாநகராட்சி பிரதான அலுவலகம் முன்பு குவிந்திருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக மாநகராட்சி ஊராட்சி பேரூராட்சி பகுதிகள் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் இந்த இடர்பாடு நிலைக்கு தூய்மை பணியாளர்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாளை முதல் வழக்கமாக தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிக்கு திரும்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...