மேட்டுப்பாளையம் அருகே லிங்காபுரத்தில் வாழைத்தோட்ட கொட்டகையை சேதப்படுத்திய காட்டு யானை - ஒருவர் படுகாயம்

சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட லிங்காபுரம் பகுதியில் வாழை தோட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இருவரை காட்டு யானை தாக்க முற்பட்டதில், ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட லிங்காபுரம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருப்பதாலும், பவானிசாகர் நீர் தேக்க பகுதியாக உள்ளதாலும் அதிகளவில் யானைகள் நடமாட்டம் உள்ளது.

மேலும், இப்பகுதியில் நீரோட்டம் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் அதிக அளவில் வாழைகள் பயிரிட்டு வருகின்றனர். இதனிடையே, லிங்காபுரம் வனத்துறை சோதனை சாவடிக்கு அருகே உள்ள செந்தில், புஷ்பா ஆகியோருக்கு சொந்தமான வாழை தோட்டத்திற்குள் அதிகாலை நேரத்தில் ஒற்றை காட்டுயானை நுழைந்தது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் இருவரையும் காட்டு யானை தாக்க முயன்றது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள் 2 பேரும் தப்பித்து ஓட முயற்சித்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக இருவரும் கீழே விழுந்தனர். இருப்பினும் தப்பி ஓடி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால், லேசான காயம் ஏற்பட்டது.

இதற்கிடையே, வாழைத்தோட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருந்த கொட்டகையை காட்டுயானை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. இதனால் லிங்காபுரம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...