கோவையில் வாழை இலை படையலுடன் மைல் கல்லுக்கு ஆயுத பூஜை

கோவை தொண்டாமுத்தூர் அருகே பூலுவபட்டியில் முக்காளி, சிறுவாணி செல்லும் சாலையில் புதிதாக வைக்கப்டுள்ள மையில் கல்லுக்கு மாலை அணிவித்து, வாழை மரம் கட்டி, வாழை இலை படையலிட்டு பூசை செய்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.



கோவை: நாளை ஆயுத பூஜையை வெகு விமர்சியாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில், கோவையில் வித்தியாசமான ஒரு ஆயுத பூஜை அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வழக்கமாக ஆயுத பூஜை அன்று டிவி, ஃபிரிட்ஜ், வாகனங்கள், அருவாமனை போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து ஆயுத பூசை செய்வர். அதேபோல தொழிற்சாலைகளில் உள்ளவர்கள், மெசின்களுக்கு பூசை செய்வார்கள்.



ஆனால் குசும்புக்கு பெயர்போன கோயமுத்தூரில் முக்காளி, சிறுவாணி செல்லும் சாலையில் உள்ள தொலைவு கல் (அல்லது) மைல் கல்லிற்கு மாலை அணிவித்து, வாழை மரம் கட்டி , வாழை இலை படையலிட்டு பூசை செய்துள்ள புகைப்படங்கள் ஆச்சரியத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

மையில் கல்லுக்கு மாலையிட்டு, பூ விட்டு, பொட்டிட்டு என நெடுஞ்சாலைத் துறையினர் இந்த வேலையை செய்திருக்க மாட்டார்கள், எனவே, அப்பகுதி மக்கள் அல்லது அங்குள்ள வாலிபர்கள் தான் இதை செய்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மறைந்த நடிகர் விவேக் ஒரு படத்தில் மைல் கல்லை குல தெய்வமாக வழிபடுவதை காட்சிப்படுத்தி ரசிக்க வைத்து அசத்தியிருப்பார். அந்த வகையில், கோவையில் மைல் கல்லுக்கு ஆயுத பூசை படையல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...