கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.331-யில் இருந்து ரூ.721 வழங்க உடன்பாடு - போராட்டம் வாபஸ்...!

இ.எஸ்.ஐ மருத்துவமனை தூய்மை பணியாளர்களும் இந்த வேலை நிறுத்ததில் ஈடுபட்ட நிலையில், தெற்கு வட்டாச்சியர் சரண்யா தலைமையில் தொழிலாளர் நலத்துறை மற்றும் மருத்துவமனை முதல்வர், போலீசார், தனியார் ஒப்பந்த நிறுவனம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு இதுவரை ரூ.331 ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இதனிடையே மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புபடி குறைந்தபட்ச ஊதியம் ரூ.721 ஐ வழங்காமல் மருத்துவமனை நிர்வாகம் தவிர்த்து வந்த நிலையில், கோவை மாவட்டம் முழுவதும் குறைந்த பட்ச ஊதியத்தை கேட்டு நடைபெற்று வரும் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.



அதே போல், இ.எஸ்.ஐ மருத்துவமனை தூய்மை பணியாளர்களும் இந்த வேலை நிறுத்ததில் ஈடுபட்ட நிலையில், தெற்கு வட்டாச்சியர் சரண்யா தலைமையில் தொழிலாளர் நலத்துறை மற்றும் மருத்துவமனை முதல்வர், போலீசார், தனியார் ஒப்பந்த நிறுவனம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.



பேச்சுவார்த்தையில், ஆட்சியர் அறிவித்த ரூ.721 வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டதால் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, இ.எஸ்.ஐ மருத்துவமனை தூய்மை பணியாளரகளின் போராட்டம் கைவிடப்பட்டது.

இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கூறும் போது:

கோவை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ஆட்சியர் அறிவித்த குறைந்த பட்ச ஊதியம் நடைமுறைபடுத்த கோரி மாவட்ட முழுவதும் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில், இ.எஸ்.ஐ மருத்துவமனை தூய்மை பணியாளர்களும் காலை முதல் போராட்டத்தை துவங்கினர்.

இந்நிலையில் தெற்கு வட்டாச்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. அதில், 3 மாதத்திற்குள் ஊழியர்கள் கோரிய, ஆட்சியர் அறிவித்த ரூ.721 வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பெண்களுக்கு கழிவறையுடன் கூறிய ஓய்வு அறை கட்டித்தருவதாகவும், வார விடுமுறை, போனஸ் அமல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தூய்மை பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ.321 மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.721 வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...