சிங்காநல்லூர் அருகே இ.எஸ்.ஐ மருத்துவமனை ஊழியர் தற்கொலை - போலீசார் விசாரணை..!

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த சுதாகரன் என்பவர் மனைவியுடன் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: சிங்காநல்லூர் அருகே மனைவியின் பிரிவை தாங்காமல் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணியாற்றி வந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் - திருச்சி சாலையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வந்தவர் சுதாகரன் (34). இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு காயத்ரி என்ற பெண்ணுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி காயத்ரியை விட்டு பிரிந்து சுதாகரன் தனியாக வசித்து வந்துள்ளார்.

கடந்த 2 நாட்களாக சுதாகரன் தங்கி இருந்த வீட்டின் கதவு திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது அண்ணன் பிரபாகரன் வந்து பார்த்தபோது சுதாகரன் அவரது வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் நைலான் கயிற்றை கட்டி தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த உதவி ஆய்வாளர் கார்த்திகேய பாண்டியன், சுதாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

முதல்கட்ட விசாரணையில், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததன் காரணமாகவே மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...