கோவையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்: ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படுமா..?

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்த கடிதம் கைக்கு வந்த பின்னரே, அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.



கோவை: குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று காலை பந்தய சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில்,ஆட்சியர் சமீரன் தலைமையில்

தூய்மை பணியாளர் சங்க பிரதிநிதிகள் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

நேற்றைய தினமான காந்தி ஜெயந்தி அன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நூதன முறையில் மனு அளித்து காலவரையற்ற வேலை நிறுத்ததில், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 2வது நாளான இன்று 2,000 தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு வரக்கூடிய தூய்மை பணியாளர்கள் என ஆங்காங்கே தூய்மை பணியாளர்கள் பணிக்கு வராததால், பல்வேறு இடங்களில் பொதுமக்கள்,நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர்.

மேலும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு கூடியது.இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணிக்கு இருந்த போலீசார் தூய்மை பணியாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட வரை கைது செய்தனர்.

ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இன்று காலை, கோவை பந்தைய சாலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில், தூய்மை பணியாளர்கள் சங்கத்தினரை ஆட்சியர் சமீரன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது மாநகராட்சி ஆணையர் பிரதாப், வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர், தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் ஏற்பட்ட இடர்பாடுகளுக்குமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தை நிறைவடைந்துள்ளது. ஒரு சில கோரிக்கைகள் அரசின் கொள்கை முடிவு என தெரிவித்துள்ளனர்.

மேலும், எங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து அவர்கள் அளித்த உத்திரவாதத்தை (மினிட்ஸ்) ஆக எழுதி கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் அந்த குறிப்பில் என்ன எழுதி கொடுப்பார்கள் என்பதை பார்த்து விட்டு தான் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் வாங்குவதா என்பது குறித்து முடிவு எடுக்க உள்ளோம்.

அதுவரை தூய்மை பணியாளர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடரும். மாலைக்குள் நல்ல முடிவு எட்டப்படும் என்று நம்பிக்கை உள்ளது, என்று ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...