கோவை இடையர் வீதியில் பட்டாகத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - 4 பேர் கைது.

இடையர் வீதி சாலையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி, ஆட்டோ ஓட்டுனர் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.



கோவை: இடையர் வீதி சாலையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விற்பனை பிரதிநிதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மாரியப்பன். இவர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அவரது செல்போனுக்கு வீடியோ ஒன்று வந்துள்ளது.

அந்த வீடியோவில், நள்ளிரவில் 6 இளைஞர்கள் ஒன்று கூடி நடுரோட்டில் நின்று கொண்டு பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் காட்சிகள் இருந்துள்ளன.

சம்பவம் நடந்த இடம் எது என்று தெரிந்து கொள்ள வீடியோவை மீண்டும் பார்த்த காவலர்,இச்சம்பவம் இடையர் வீதியில் நடைபெற்றுள்ளது என்பதை உறுதி செய்தார்.

இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் தகவல் அளித்த அவர், ரோந்து வாகனத்தில் மேலும் சில காவலர்களுடன் இடையர் வீதி பகுதிக்கு சென்றார். அப்போது விசாரித்ததில், அந்த வீடியோவானது கடந்த மாதம் 25ஆம் தேதி எடுக்கப்பட்டது என தெரியவந்தது.

இதனையடுத்து, நடைபெற்ற விசாரணையில், செல்வபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக (Sales Rep) பணியாற்றி வரும் அசோக்குமார் (30) என்பவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரிய வந்தது.

இதனைதொடர்ந்து செல்வபுரத்தை சேர்ந்த அசோக்குமாரை கைது செய்த போலீசார், அவரது நண்பர்களான செல்வபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அரவிந்தகுமார் (27), வடவள்ளி பி.என்.புதூரை சேர்ந்த கூலிதொழிலாளி தினேஷ்குமார் (23) மற்றும் காந்திபார்க் பகுதியை சேர்ந்த பார்த்திபன் ஆகியோரை கைது செய்தனர்.

இதில், அசோக்குமார், தினேஷ்குமார், பார்த்திபன் ஆகியோர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும்,வழக்கில் தொடர்புடைய இருவரை தேடி வருகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பேரில் பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்களுடன் கேக் வெட்டி கொண்டாடுவது குறித்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அவ்வாறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பட்டாகத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...