கோவை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமனம்.

கோவையில் நகர் மாவட்ட கல்வி அலுவலராக (டி.இ.ஓ) பணியாற்றிய வள்ளியம்மை, பொள்ளாச்சி தொடக்க கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்திற்கு இடைநிலை கல்விக்கான டி.இ.ஓ., வாக, பாண்டிய ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், தனியார் பள்ளிகளுக்கான டி.இ.ஓ.,வாக முருகேஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்திற்கு, இரு தொடக்க கல்வி, இடைநிலை கல்வி உட்பட ஐந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி கல்வித்துறையில் நிர்வாக பணிகளில் உள்ள மந்தநிலை சீராக்கவும், ஒரே பதவியில் குவியும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவும், சில மாற்றங்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி, 55 இடைநிலைக்கல்வி மாவட்ட அலுவலர்கள், 58 தொடக்க கல்விக்கான மாவட்ட அலுவலர்கள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கல்வி அலுவலர்கள் என 152 அலுவலகங்கள் தொடங்கப்பட்டன.

கோவை மாவட்டத்திற்கு, கோவை மற்றும் பொள்ளாச்சிக்கு இரு தொடக்க கல்வி அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி தொடக்க கல்வி அலுவலராக, ஏற்கனவே கோவையில் நகர் மாவட்ட கல்வி அலுவலராக (டி.இ.ஓ) பணியாற்றிய வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக புனிதா அந்தோணியம்மாள் மாறுதல் பெற்றுள்ளார். இவர் குன்னுார் டி.இ.ஓ -வாக பணியாற்றியவர். கோவை மாவட்டத்திற்கு இடைநிலை கல்விக்கான டி.இ.ஓ., வாக, பாண்டிய ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை மாநகராட்சி கல்வி அலுவலராக பணியாற்றியவர்.

பொள்ளாச்சி இடைநிலை டி.இ.ஓ., வாக கீதா பொறுப்பேற்றுள்ளார். இவர், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் டி.இ.ஓ.,வாக பணியாற்றியவர்.இரு இடைநிலை டி.இ.ஓ.,க்களும், ஏற்கனவே, கோவை மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், தனியார் பள்ளிகளுக்கான டி.இ.ஓ.,வாக முருகேஷன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காளப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி, பதவி உயர்வு மூலம் டி.இ.ஓ.,வாக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...