கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கைது.

குறைந்தபட்ச ஊதியம் பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம்வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர்,மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.



தொடர்ந்து பலமுறை வலியுறுத்திய நிலையில், மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், தொடர்ந்து இந்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படாத நிலையில், கடந்த மாதம் மாவட்ட நிர்வாகத்துடன் ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரண்டு முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி காந்தி ஜெயந்தி தினமான நேற்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை முன் நூதன முறையில் மனு கொடுத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டத்தின்இரண்டாவது நாளான இன்று கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு வரக்கூடிய தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணிக்கு இருந்த போலீசார் தூய்மை பணியாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட வரை கைது செய்தனர்.

இதனிடையே ஆங்காங்கே தூய்மை பணியாளர்கள் பணிக்கு வராததால், பல்வேறு இடங்களில் பொதுமக்கள்,நோயாளிகள் அவதிக்கு உள்ளாக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.



எனவே, அவர்களது நியாமான கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...