புனித ஜோசப் பாலிடெக்னிக் சார்பில் கோவை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்


கோவை மாவட்டம் வீரப்பனூரில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் இவ்வருடத்திற்கான கோவை மண்டல அளவிலான அனைத்து விளையாட்டுப் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.



இப்போட்டிகளின் இறுதியாக இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 2, 3) கோவை மண்டல அளவிலான தடகள போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

இதில், கோவை மண்டல அளவில் 36 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து சுமார் 1100 பேர் கலந்து கொண்டனர்.

இதன் துவக்க விழாவானது இன்று சிறப்பு விருந்தினர் கோவை மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜால் துவக்கி வைக்கப்பட்டது. மேலும், இத்துவக்க விழாவில் புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியின் விளையாட்டுக் கொடியை சிறப்பு விருந்தினர் அறிமுகப்படுத்தினார்.



அதைத்தொடர்ந்து, கொடியேற்றுதல், சுடர் தீபம் ஏற்றுதல், உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.



புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் எஸ்.எஸ்.நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எஸ்.செந்தில்நாதன் வரவேற்புரையும், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ஜே.சுரேஷ் நன்றியுரையும் வழங்கினர்.

மேலும், நாளை நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்களைகளுக்கு கோவை மாநகர போக்குவரத்துத் துறை ஆணையர் எஸ்.சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பதக்கங்களும், சுழற்கோப்பைகளும் வழங்கவுள்ளார்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...