கோவை பாப்பநாயக்கன்பாளையம் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பலி

வீட்டின் மாடியில் தண்ணீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அதை 3-வது மாடியில் நின்று சரி செய்து கொண்டிருந்த போது திடீரென்று கால் வழுக்கி 50 உயரத்திலிருந்து கீழே விழுந்த மளிகை வியாபாரி உயிரிழந்தார்.


கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையம், வேணுகோபால் லேஅவுட்டை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 71) மளிகை கடை நடத்தி வந்தார்.



இவரது வீட்டின் மாடியில் தண்ணீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அதை 3-வது மாடியில் நின்று சரி செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று கால் வழுக்கி 50 உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அவரது மகன் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முத்துராஜ் மளிகை கடை நடத்தி வந்ததால், அவரது உடலுக்கு ஏராளமான வியாபாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மாடியில் இருந்து தவறி விழுந்து வியாபாரி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் உறவினர்கள் வியாபாரிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...