கோவையில் உயர் ரக போதை பொருள் கடத்திய கேரளா வாலிபர்கள் கைது; தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

கோவை கே.ஜி சாவடி அருகே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கேரளாவை சேர்ந்த இரு வாலிபர்கள் உயர் ரக போதை பொருளை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. போதை பொருளை பறிமுதல் செய்த இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கே.ஜி சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் வாகன தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை சோதனை செய்ததில், அவர்கள் உயர் ரக போதைப் பொருளான "Methamphedamine" ஐ விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

கடத்தப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இரு வாலிபர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் பாலக்காடு ஆழிக்கல் ஹவுஸ் பகுதியை சேர்ந்த அப்துல் ராஷீக் (21) மற்றும் ஜெசிர் (21) என்று தெரியவந்தது.



இரண்டு நபர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து விற்பனைக்கு கொண்டு சென்ற சுமார் 6,00,000/- மதிப்புள்ள 151 கிராம் எடையுள்ள (வணிக தர எடை) Methamphedamine போதைப் பொருள்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.



பின்னர், இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வாகன சோதனையில் உயர் ரக போதைப்பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெகுவாக பாராட்டினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...