மெட்ரோ ரயில்: திருப்பூருக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தப்படும் - ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் இன்று பதவியேற்று கொண்ட சங்க தலைவர் சுப்பிரமணியம், திருப்பூருக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.


திருப்பூர்: கோவையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பூருக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தப்படும் என புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தேர்தல் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த நிலையில் புதிய நிர்வாகிகள் இன்று அப்பாச்சி நகரில் உள்ள திருப்பூர் சங்க அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர் .

பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கே எம் சுப்பிரமணியம் பேசியதாவது,

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் தொழில்துறை மற்றும் திருப்பூரில் வளர்ச்சிக்கு பங்காற்ற பணியாற்ற இருக்கிறோம். தமிழக அரசு கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வரக்கூடிய சூழ்நிலையில், அதனை திருப்பூர் வரை விரிவாக்கம் செய்ய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.

குறைந்தபட்சம் 20,000 தொழிலாளர்கள் தங்கும் வகையில் குடியிருப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஆண்டுக்கு 20 சதவீத பின்னலாடை உற்பத்தி வளர்ச்சியை உறுதி செய்யப்படும். லண்டன் மட்டும் யூரோ நாடுகளுடன் இணைந்து தொழில் வளர்ச்சியை மேம்படுத்த இருக்கிறோம்.

தீபாவளிக்கு பின்பு தொழில் மீண்டும் பழைய வளர்ச்சியை அடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு திருப்பூர் பின்னலாடைத்துறை மீண்டும் வளர்ச்சியை அடையும்.

தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் விபத்து காப்பீடு அடையாள அட்டை ஆகியவை ஏற்படுத்தி தரப்படும் .

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...