ஆயுத பூஜை விடுமுறை: கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 70 பஸ்கள் இயக்கம்; அலைமோதும் மக்கள் கூட்டம்.

இன்றிலிருந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதால் கோவை பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் ஏதுவாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக 70 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளன.


கோவை: பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை என தொடர்ந்து விடுமுறை வருவதால், அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல கோவை பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.



இதற்காக கோவையில் இருந்து நெல்லை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

இன்று, சனிக்கிழமையில் இருந்து விடுமுறை தொடங்கி விட்டதால் நேற்று மாலையே பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.



இதனால் கோவையில் உள்ள சிங்காநல்லூர், காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பயணிகள் வசதிக்காக சிங்காநல்லூரில் இருந்து திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கும், காந்திபுரத்தில் இருந்து சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நேற்று கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட்டன.



கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையிலும் போதுமான பேருந்துகள் இல்லாததால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய சிரமம் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மேலும் 70 பேருந்துகளை கூடுதலாக போக்குவரத்துத் துறையினர் இயக்கியுள்ளது மக்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, பண்டிகை காலம் என்பதால், நேற்று கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது பயணிகளின் வசதிக்காக இன்று முதல் 70 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது, என்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...