தெலுங்குபாளையம் அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த சோகம்.

நண்பர்கள் இருவருடன் முண்டந்துறை தடுப்பணையில் குளிக்கச் சென்ற 11ஆம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கிய நிலையில், தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மாணவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


கோவை: தெலுங்குபாளையம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற 11ஆம் வகுப்பு மாணவர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பாரதி ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் நவீன்குமார்(15), டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம்நவீன் குமார் பள்ளிக்கு செல்லாமல், தனது நண்பர்கள் 3 பேருடன் முண்டந்துறை தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், அவரை காப்பாற்ற முயற்சி செய்தும், நவீன் குமாரை காப்பாற்ற இயலவில்லை. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் உடலை மீட்டனர். இதனையடுத்து, சிறுவன் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...