கோவை ரேஸ் கோர்ஸ் அருகே பான்மசாலா பொருட்களை பார்சல் செய்து வெளியூருக்கு அனுப்ப முயன்ற ரியாசுதீன் என்பவரை கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து அரை டன் பான் மசாலாவை பறிமுதல் செய்த போலீசார் அவரது பின்புலத்தில் இருப்பவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை பந்தய சாலை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்டபான்மசாலா பொருட்களை பார்சல் செய்து வெளியூர்களுக்கு அனுப்ப முயன்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, அரை டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களைவிற்பவர்கள் மீது மாவட்ட மற்றும் மாநகர் போலீசார் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பெட்டி கடைகளில், பொது இடங்களில் தொடர்ந்து புகையிலை பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்கும் நபர்கள் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
போலீசாரின் கிடுக்குபிடியால் நேரடியாகதடை செய்யப்பட்ட பொருட்களை விற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் போதை பொருட்கள் விநியோகம் செய்ய நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர்.
அப்படி, கோவை பந்தய சாலை பகுதியில் நூதன முறையில் பான் மசாலா பொருட்களை பார்சல் செய்து வெளியூர்களுக்கு விற்பனை செய்து வந்த கும்பல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
அதன் அடிப்படையில் , கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பான் மசாலா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனைதொடர்ந்து, பந்தய சாலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி சந்தேகிக்கும் படியான நபர்களை கண்காணித்து வந்தனர்.
அப்பொழுது, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பார்சல் சர்வீஸ் ஒன்றில் ரியாசுதின் என்பவர் வெளியூருக்கு பார்சல் ஒன்றை அனுப்ப வந்துள்ளார்.
அவர் மீது சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார், அவரை விசாரித்தனர். மேலும்,அவரது பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், போத்தனூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவரது வீட்டில் அரை டன் பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.
தொடர் விசாரணையில், கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து புகையிலையை வாங்கும் ரியாசுதீன், அவற்றைகார் அல்லது ரயிலில் கொண்டு வந்தால் மாட்டிக் கொள்வோம் என நினைத்து, பார்சல் மூலம் புகையிலை பொருட்களை பெற முடிவு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவ்வாறு பெறப்படும் பார்சலில் சந்தேகம் ஏற்படாத வகையில், மருத்துவ பொருட்களை அனுப்புவது போல பில் வைத்து பார்சல்களை பெற்று வந்துள்ளார்.
போத்தனூரில் உள்ள அவரது வீட்டில் புகையிலை பொருட்களை தேக்கி வைத்திருந்தரியாசுதீன், தேவைப்படுபவர்களுக்கு பார்சல் மூலம் அனுப்பி வைத்து வந்துள்ளார்.
அப்படி வழக்கம் போல், பான் மசாலாவைபார்சல் செய்து வெளியூருக்கு அனுப்ப வந்த போது தான் போலீசாரிடம் அவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார். விசாரணையின் பின்பு, அவரை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற அரை டன் பான் மசாலா பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்,
மேலும், இவர் மீது ஏற்கனவே திருப்பூர், நெல்லூர் உள்ளிட்ட இடங்களில், வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளன.
நூதன முறையில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்று வந்த ரியாசுதீனின் பின்புலத்தில் இருப்பவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.