கோவையில் இருந்து சீரடிக்கு இன்று இரவு 6-வது பாரத் கௌரவ் ரயில் புறப்பட்டது

தனியாருடன் இணைந்து இதுவரை ஐந்து 'பாரத் கவுரவ்' ரயில்' இயக்கப்பட்ட நிலையில் இன்று ஆறாவது ரயில் கோவையிலிருந்து சீரடிக்கு இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்றது.


கோவை: தெற்கு ரயில்வேயின், 'பாரத் கவுரவ்' ரயில், இன்று கோவையில் இருந்து சீரடிக்கு புறப்பட்டது.

ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் வழங்க, தனியாருடன் இணைந்து பாரத் கவுரவ் ரயில்களை, தெற்கு ரயில்வே இயக்குகிறது. இதுவரை, ஐந்து ரயில்கள் பல பகுதிகளுக்கு இயக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, ஆறாவது ரயில், இன்று, கோவை வடகோவை ஸ்டேஷனில் இருந்து ஷீரடிக்கு (சாய்நகர்) இயக்கப்பட்டது.

இரவு 8:00 மணிக்கு புறப்பட்ட ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், யெலஹங்கா (பெங்களூரு), தர்மாவரம், மந்தராலயம் ஸ்டேஷன்களில் நின்று, அக்., 2ம் தேதி காலை 8:00 மணிக்கு சீரடி சென்றடையும்.

அதேபோல, மறு மார்க்கமாக அக்., 3ம் தேதி காலை 11 மணிக்கு ஷீரடியில் இருந்து புறப்படும் ரயில், 4ம் தேதி மதியம், 3:00 மணிக்கு கோவை வந்தடையும் என, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று இயக்கப்பட்ட ரயிலில், முதல் வகுப்பு ஏ.சி., இரண்டாம், மூன்றாம் வகுப்பு, படுக்கை வசதி உட்பட, 14 பெட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...