திமுக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் எண்ணத்தில் மூதாட்டி ஒருவரை வேண்டுமென்றே பேருந்தில் பயண சீட்டு தொடர்பாக நடத்துனரிடம் தகராறு செய்ய வைத்த அதிமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக ஐடி பிரிவினர் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவை: கோவை காந்திபுரத்தில் இருந்து பாலத்துறைக்கு சென்ற பேருந்து மூதாட்டி ஒருவர் எனக்கு ஓசி பயணம் வேண்டாம் நான் டிக்கெட் வாங்கி பயணிக்கிறேன் என்று நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வந்தது.
இந்த நிலையில் துளசி அம்மாள் என்ற அந்த மூதாட்டியை வேண்டுமென்றே நடத்துனரிடம் தகராறு ஈடுபட வைத்தது, அதிமுகவினர் செய்த சதி என்று திமுக தொழில்நுட்ப பிரிவினர் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அந்த மூதாட்டியை இலவச பேருந்து திட்டத்தை குறித்து தவறாக பேசி, பேருந்து நடத்துனரிடம் சண்டையிடுமாறு தூண்டிவிட்டு அதை வீடியோ எடுத்து அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளதாக, த் திமுக தகவல் மற்றும் பிரிவினர் குற்றம் சாட்டினர்.
எனவே, மகளிருக்கான அரசின் திட்டத்தை தவறாக சித்தரித்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய அதிமுகவினர் மீத உரிய நடவடிக்கை எடுக்குமாறு திமுக ஐடி பிரிவினர் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.